விண்வரும் மேகங்கள் பாடும் மாவீரர்கள் நாமங்கள் கூறும்
    கண்வழி கங்கைகள் பாயும் இவர் காவிய நாயகர் ஆகும்
    [புதைந்த குழியில் இருந்து நீங்கள் எழுந்து வாருங்கள்
    எரிந்த இடத்தில் இருந்து நீங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)

    வேங்கைகளாகி விடிவுகள் தேடி விழுந்த வீரர்களே
    தமிழ் வீடுகள் யாவிலும் விளக்குகளாக எரியும் சுடருகளே
    இளமைக்கால இனிமைகள் யாவும் துறந்த வேங்கைகளே
    தமிழனத்துக்காக இரந்து தீயில் எரிந்த வீரர்களே

    [எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
    தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள் (விண்வரும்.....)

    எதிரிகள் பாடி வீடுகள் ஏறி நடந்த வேங்கைகளே
    உயிர் இழந்த போதும் உணர்வுகளோடு மடிந்த வீரர்களே
    காற்றும் நிலவும் பூக்கும் மலரும் உங்கள் பெயர்சொல்லும்
    இனி காலம் யாவும் நீளும் போது எங்கள் பெயர் வெல்லும்

    [எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
    தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள் (விண்வரும்.....)

    உங்கள் கனவே எங்கள் நினைவாய் எழுந்து நிற்கின்றோம்
    உயிர் ஓடும் குருதி யாவும் சொரியும் நிலத்தில் நிற்கின்றோம்
    தலைவன் வழியில் புலிகள் அணியாய் நடந்து செல்கின்றோம்
    வரும் தடைகள் யாவும் உடையும் உடையும் நிமிர்ந்த கொள்கின்றோம்

    [எழுந்து வாருங்கள் நிமிர்ந்து வாருங்கள்](2)
    தமிழீழம் மலரும் நேரம் இதுதான் புரிந்த வாருங்கள்

    மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
    மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
    கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
    கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
    வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
    செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.
    வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
    செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.

    சாவை புறங்கைகளினால் தட்டி விட்டவர்- தம்
    தாயகத்துக்காக உயிர் தன்னை விட்டவர்*
    கோபவிழி கொண்டு களம் மீது தொட்டவர்- பகை
    கோட்டை பொடியாக உயிர் வீசி விட்டவர்*

    தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
    தீபஒளி ஏற்று அந்த செல்வங்களைப் போற்று
    காவல் தெய்வம் ஆனவரின் கல்லறையை ஆற்று
    மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
    மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
    கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
    கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்

    மண்ணுக்குள்ளே கண்ணை மூடி தூங்குகின்றவர்-இன
    மானம் பெரிதானதென்று சொல்லுகின்றவர்
    கண்ணுக்குள்ளே வந்து கன வாகி நிற்பவர்- வெல்லும்
    காலம் வரை எங்களுக்கு காவல் நிற்பவர்

    பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு
    பூ எடுத்து போடு அந்த பாடலினை பாடு-காவியத்து
    நாயகர்கள் கல்லறைகள் மீது
    மேகம் வந்து கீழிறங்கி முத்தம் கொடுக்கும்
    மாவீரர்களின் வேர்களிலே பன்னீர் தெளிக்கும்
    கல்லறைகள் விடுதலை கருவறைகள் - நாங்கள்
    கைகள் தொழும் தெய்வங்களின் அரியணைகள்
    வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
    செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும்.
    வண்ண மலர் தூவும் அந்த வாசல் வந்து பாரும்
    செல்லும் போது தேகமெல்லாம் புல்லரித்து போகும

    கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
    உங்கள் கனவுதனை எமதாக்கித் தொடர்கின்றோம்
    ஆஆஆஆஆஆ.........

    [மண்மீது பற்றுக் கொண்டீர் மறைவிடம் சேர்ந்தீர்
    மறவர்களாக மீண்டும் பாசறை எரித்தீர்] 2
    எரித்திடும் வேளைதனில் சிதையாய் விழுந்தீர்
    [மறைந்திடுமோ உம் நினைவு
    அழிந்திடுமோ உம் கனவு] 2
    விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
    விரைந்திடுவோம் எதிரியவன் உயிரறுத்து விடைகொடுப்போம்
    ஆஆஆஆ........

    கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
    உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

    [தன்மானம் காக்கவென்று தாயினைப் பிரிந்தீர்
    தாய்நாட்டைக் மீட்கவென்று உறவுகள் மறந்தீர்] 2
    விழுகின்ற போதும் எம் விடிவினை நினைத்தீர் [எரிமலையாய் நாம் எழுவோம்
    விடுதலைக்காய் தலை தருவோம்] 2
    விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
    விலங்கறுப்போம் சிறையுடைப்போம் விடுதலைப்பண் பாடிடுவோம்
    ஆஆஆஆ.........

    கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
    உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்

    [பூவாக வாழ்ந்திங்கு புயலாயெழுந்தீர்
    புதுவரலாறெழுதி களந்தனைச் சேர்ந்தீர்] 2
    பூகம்பப் பொறியாய் எம் மனதினில் பதிந்தீர் [கடமையினை நாம் மறவோம்
    பயிற்சியினை நாம் பெறுவோம்] 2
    தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்
    தாயகத்தை மீட்டு எங்கள் தலைவன் புகழ் பாடிநிற்போம்
    ஆஆஆஆ.......

    கல்லறையில் விளக்கேற்றிப் பணிகின்றோம்
    உங்கள் கனவு தனை எமதாக்கித் தொடர்கின்றோம்.....


    எங்கள் தோழர்களின் புதைகுழியில்
    மண்போட்டுச் செல்கின்றோம்
    இவர்கள் சிந்திய குருதி -தமிழ்
    ஈழம் மீட்பது உறுதி

    இளமைநாளின் கனவையெல்லாம்
    எருவாய் மண்ணில் புதைத்தவர்கள்
    போர்க்களம் படைத்து தமிழ்இனத்தின்
    கருத்தில் நெருப்பை விதைத்தவர்கள்

    வாழும்நாளில் எங்கள் தோழர்
    வாழ்ந்த வாழ்வை நினைக்கின்றோம் - எம்
    தோழர் நினைவில் மீண்டும் தோளில்
    துப்பாக்கிகளை அணைக்கின்றோம்

    தாவிப்பாயும் புலிகள்நாங்கள்
    சாவைக்கண்டு பறப்போமா
    பூவாய்ப் பிஞ்சாய் உதிரும் புலிகள்
    போனவழியை மறப்போமா


    மாண்ட வீரர் கனவு பலிக்கும், மகிழ்ச்சி கடலில் தமிழ்மண் குளிக்கும்.

    இவர்கள் சிந்திய குருதி தமிழ் ஈழம் மீட்பது உறுதி!!!

    Thank you! for sending this Webpage to your friend








    காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.