பொதுவாக நான் எல்லாப் பாடல்களையும் கேட்பேன்; பளைய பாட்டுக்கள் புதிய பாட்டுக்கள் எல்லாப் பாடல்களையும் கேட்பேன். அதுவும் இளையராஜா இசை என்றால் மீண்டும் மீண்டும் கேட்பேன். இளையராஜா இசையில் எனக்கு பிடித்த பாட்டுக்கள் ஏராலம், ஏராலம். இடைக்காலப்பாடல்கள் மிக அருமையான பாடல்கள், கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுவம் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள், என்றால் பசிகூட எடுக்காது. இசையால் வசையாகா இதயமுண்டோ...எனக்கு பிடித்த இசை அமைப்பாளர்கள் என்ற வரிசையில் முதலில் வருவது இளையராஜா தான்.
தாய் மூகாம்பிகை படத்தில், கவிஞர் வாலி பாடல் வரிகளுக்கு, பாடியவர்கள்: இசைஞானி, சுரேந்தர் மற்றும் தீபன் சக்ரவர்த்தி. கல்யாணி ராகம்: ராகம் என்று சொன்னவுடன் நான் ஏதோ ராகம் தாளம் பற்றி எல்லாம் பேச போகிறேன் என்று நினைத்து விடாதிர்கள்...எனக்கு அந்த அளவுக்கு ஞானம் எல்லாம் இல்லை பாருங்கோ........... எனக்கு பிடித்த பாடல்கள். உங்களுக்கும் பிடிக்கும் என்று நினைக்கிறேன். படித்து பார்த்து ரசியுங்கள்.
(சிவ சக்த்யா யுக்தோ
யதி பவதி சக்த ப்ரபவிதும்
நசே தேவம் தேவோ ந கலு
குசல ஸ்பந்தி துமபி
அதஸ் த்வாம் ஆராத்யாம்
ஹரி ஹர விரிஞ்சாதி பிர் அபி
பிரணந்தும் ஸ்தோதும் வா
கதாம் அக்ருத புண்யப் ப்ரபவதீ)
ஆ...ஆ.....
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஒரு மான் மழுவும் சிறு கூன் பிறையும்
சடை வார் குழலும் விடை வாகனமும்
கொண்ட நாயகனின் குளிர் தேகத்திலே
நின்ற நாயகியே இட பாகத்திலே
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜகன் மோஹினி நீ சிம்ம வாஹினி நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
சதுர் வேதங்களும் பஞ்ச பூதங்களும்
ஷண் மார்க்கங்களும் சப்த தீர்த்தங்களும்
அஷ்ட யோகங்களும் நவ யாகங்களும்
தொழும்பூங் கழலே மலை மாமகளே
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
அலைமாமகள் நீ கலைமாமகள் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஸ்வர்ண ரேகையுடன் ஸ்வயமாகி வந்த
லிங்க ரூபிணியே மூகாம்பிகையே
பல ஸ்தோத்திரங்கள் தர்ம சாஸ்திரங்கள்
பணிந்தேத் துவதும் மணி நேத்திரங்கள்
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
சக்தி பீடமும் நீ ஸர்வ மோக்ஷமும் நீ
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜகத்காரணி நீ பரிபூரணி நீ
ஜனனி ஜனனி ஜனனி
ஜனனி ஜனனி ஜகம் நீ அகம் நீ
மணிரத்னத்தின் முதல் தமிழ் படமான பகல் கனவு படத்தில், இசைஞானி இளையராஜா இசையமைத்து, ஜானகி உடன் பாடி புகழ்பெற்ற மற்றொரு அருமையான பாடல் இது.
ஒவ்வொரு பாடலிலும்... ஒவ்வொரு நினைவிருக்கும்! பூமாலையே தோள் சேரவா பாடல்; தமிழில் ஒருவர் பாடிக்கொண்டிருக்கும் பேது, மற்ரவர் பாடுவார். இந்தப்புகழ் இசைஞானி இளையராஜாவுக்குத்தான்! ராஜா-ஜானகி குரல்களில் வந்த அருமையான பாட்டுகளில் இதுவும் ஒன்று!!
பூமாலையே தோள் சேரவா
பூமாலையே தோள் சேரவா – ஏங்கும் இரு
இளைய மனது …இளைய மனது
இணையும் பொழுது ….இணையும் பொழுது
இளைய மனது …தீம்தன..தீம்தன
இணையும் பொழுது …தீம்தன …தீம்தன
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே (பூமாலையே ………)
நான் உனை நினைக்காத நாளில்லையே
தேனினைத் தீண்டாத பூவில்லையே …….தன நா..
நான் உனை நினைக்காத நாளில்லையே……..என்னை உனகென்று கொடுத்தேன்
தேனினைத் தீண்டாத பூவில்லையே…..எஙும் இளம் காதல் மகிழ
தேன் துளி பூவாயில் பூவிழி மான்சாயல்
தேன் துளி பூவாயில் …….தன..னா
பூவிழி மான் சாயல்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வண்டு தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல்
கலையெல்லாம் பழகுவோம் அனுதினம்.. (பூமாலையே ………)
கோடையில் வாடாத கோவில் புறா
காமனை காணாமல் காணும் கனா ….தன..னா
கோடையில் வாடாத கோவில் புறா…. ராகம் தூஙாது ஏங்க..
காமனை காணாமல் காணும் கனா … நாளும் மனம் போகும் எங்கோ
விழிகளும் மூடாது விடிந்திட கூடாது
விழிகளும் மூடாது…….தன நா
விடிந்திட கூடாது…….தன நா
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட தாளம் ஜதி கூட்ட கரும்புகள் எதிர்வரும் அனுபவம் (பூமாலையே ………)
கவிஞர் வைரமுத்து முதன்முதலில் எழுதிய வைரவரிகள். இன்று கவியரசு கண்ணதாசனுக்குப் பிறகு கவியரசு என்னும் பட்டத்தை இவர் பெற்றுள்ளார்.
இளையராஜாவின் இனிய கானம் ...ராசாவே உன்னை நம்பி: இளையராஜா உன்னை நம்பி எடுத்த படம். பாடியவர்கள்: மனோ, P சுசீலா
காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.