• எனக்கு என்னவோ தெரியல, இந்தப்பாட்டு "சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி" எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு, படம் - வறுமையின் நிறம் சிவப்பு, இந்தப்பாட்டை திருப்ப திருப்ப பார்பேன். இந்தப்பாட்டை முணுமுணுத்துக்கிட்டே. ...... பார்பேன். .


      தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா
      ஆஹா
      சிப்பியிருக்குது முத்துமிருக்குது திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி

      லல்ல லலலல்ல லல்ல லலலல்ல லல்ல
      லலலல்ல லாலல்லல்ல லாலாலா
      சிந்தையிருக்குது சந்தமிருக்குது
      கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

      சிப்பியிருக்குது முத்துமிருக்குது
      திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
      சிந்தையிருக்குது சந்தமிருக்குது
      கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி
      எப்படி?

      ம்?
      சந்தங்கள்
      நாநநா
      நீயானா
      ரிஸரி
      சங்கீதம்
      ம்ம்ம்
      நானாவேன்

      சந்தங்கள் நீயானா சங்கீதம் நானாவேன்

      சிப்பியிருக்குது முத்துமிருக்குது
      திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
      தா.......
      சிந்தையிருக்குது சந்தமிருக்குது
      கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி ஹஹா.

      னனனனனா
      Come on. Say it once again!
      னனனனனா
      ம்... சிரிக்கும் சொர்க்கம்
      தரனனா தரரனானா
      தங்கத்தட்டு எனக்கு மட்டும் OK?
      தாரே தாரே தானா
      அப்படியா?
      தேவை பாவை பார்வை
      தத்தனதனா
      நினைக்க வைத்து
      னனனன லாலாலாலா
      நெஞ்சில் இன்று நெருங்கி வந்து
      னனனனனனனா தானானா லாலலா லாலாலா
      Beautiful!
      மயக்கம் தந்தது யார்? தமிழோ? அமுதோ? கவியோ?

      சிப்பியிருக்குது முத்துமிருக்குது
      திறந்து பார்க்க நேரமில்லடி ராஜாத்தி
      சிந்தையிருக்குது சந்தமிருக்குது
      கவிதைபாட நேரமில்லடி ராஜாத்தி

      சந்தங்கள்
      அஹாஹா
      நீயானா
      அஹாஹா
      சங்கீதம்
      அஹாஹா
      நானாவேன்
      அஹாஹா

      இப்பப் பாக்கலாம்!

      தனன தனன னானா
      ம்..?
      மழையும் வெயிலும் என்ன?
      தன்னனன தனன னான னானா
      உன்னைக் கண்டால் மலரும் முள்ளும் என்ன?

      தனனனான தனனனான தான்னா
      அம்மாடியோ...
      தனனனான தனனனான தான்னா
      ஆங். ரதியும் நாடும் அழகிலாடும் கண்கள்
      சபாஷ்

      கவிதை உலகம் கெஞ்சும் உன்னைக் கண்டால்
      கவிஞர் இதயம் கொஞ்சும்
      ஹஹ
      கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
      நானுரைத்தேன்
      கொடுத்த சந்தங்களில் என் மனதை நீயறிய
      நானுரைத்தேன்

      சிப்பியிருக்குது முத்துமிருக்குது
      திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
      சிந்தையிருக்குது சந்தமிருக்குது
      கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது
      சிப்பியிருக்குது முத்துமிருக்குது
      திறந்து பார்க்க நேரம் வந்தது இப்போது
      சிந்தையிருக்குது சந்தமிருக்குது
      கவிதைபாடிக் கலந்திருப்பது எப்போது

      ஹாஹாஹா லலல்லா ம்ம்ம் ஆஹாஹா
      லாலாலா லாலாலா லாலாலா லாலாலா



  • கமலின் நூறாவது படமான ராஜ பார்வை படத்தில் இந்தப் பாடல் "அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது"...அப்போது எனக்கு சின்ன வயது. முத்தாய்ப்பாக இந்தப் பாடலை பாலுவும் ஜானகியும் நன்றாகப் பாடியிருக்கிறார்கள்.


      அந்தி மழை பொழிகிறது
      ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது

      அந்தி மழை பொழிகிறது
      ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
      இந்திரன் தோட்டத்து முந்திரியே
      மன்மத நாட்டுக்கு மந்திரியே (அந்தி மழை)

      தேனில் வண்டு மூழ்கும்போது
      பாவம் என்று வந்தாள் மாது
      நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்
      தண்ணீரில் மூழ்கிக்கொண்டே தாகம் என்பாய்

      தனிமையிலே வெறுமையிலே
      எத்தனை நாளடி இளமையிலே
      கெட்டன இரவுகள் சுட்டன கனவுகள்
      இமைகளும் சுமையடி இள மயிலே (அந்தி மழை)

      தேகம் யாவும் தீயின் தாகம்
      தாகம் தீர நீதான் மேகம்
      கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது
      தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது

      நெஞ்சு பொறு கொஞ்சம் இரு
      தாவணி விசிறிகள் வீசுகிறேன்
      மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
      சந்தனமாய் எனைப் பூசுகிறேன் (அந்தி மழை)


      அந்தி மழை பொழிகிறது
      ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது
      சிப்பியில் தப்பிய நித்திலமே
      ரகசிய ராத்திரி புத்தகமே

      அந்தி மழை பொழிகிறது
      ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது





  • 1983 இல் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல் "மௌனமான நேரம் இளம் மனதில் என்ன பாரம்" வைரமுத்து பாடல்விரிக்கு, S.P. பாலவும் ஜானகியும் நன்றாகப் பாடியிருக்கிறார்கள், திரைப்படம் - சலங்கை ஒலி.


      மௌனமான நேரம்
      மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்
      மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்
      மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
      மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
      ஏனென்று கேளுங்கள்
      இது மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்

      இளமைச் சுமையை மனம் தாங்கிக் கொள்ளுமோ
      புலம்பும் அலையை கடல் மூடிக் கொள்ளுமோ
      குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
      குளிக்கும் ஓர் கிளி கொதிக்கும் நீர்த் துளி
      ஊதலான மார்கழி நீளமான ராத்திரி
      நீ வந்து ஆதரி
      மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்

      இவளின் மனதில் இன்னும் இரவின் ஈரமோ
      கொடியின் மலர்கள் குளிர் காயும் நேரமோ
      பாதை தேடியே பாதம் போகுமோ
      பாதை தேடியே பாதம் போகுமோ
      காதலான நேசமோ கனவு கண்டு கூசுமோ
      தனிமையோடு பேசுமோ
      மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்
      இது மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்
      மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
      மனதில் ஓசைகள் இதழில் மௌனங்கள்
      ஏனென்று கேளுங்கள்
      இது மௌனமான நேரம்
      இள மனதில் என்ன பாரம்





  • கம்பன் ஏமாந்தான் - நிழல் நிஜமாகிறது படத்தில் வரும் இன்னொரு அருமையான பாடல். எஸ்.பி.பால "அட நானும் ஏமாந்தேன்" என ஏளனச் சிரிப்புடன் பாடியிருப்பார்....எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் கவியரசர் கண்ணதாசன் வரிகள்.


      கம்பன் ஏமாந்தான் -
      இளம் கன்னியரை ஒரு மலர் என்றானே
      கற்பனை செய்தானே
      கம்பன் ஏமாந்தான்

      அம்பு விழி என்று ஏன் சொன்னான்
      அது பாய்வதினால் தானோ - அவள்
      அருஞ்சுவைப் பாலென ஏன் சொன்னான்
      அது கொதிப்பதனால் தானோ (கம்பன்)

      தீபத்தின் ஜோதியில் திருக்குறள் படித்தால்
      தீபத்தின் பெருமையன்றோ - அந்த
      தீபத்தினால் ஒரு நெஞ்சத்தை எரித்தால்
      தீபமும் பாவமன்றோ (கம்பன்)

      வள்ளுவன் இளங்கோ பாரதி என்றொரு
      வரிசையை நான் கண்டேன் - அந்த
      வரிசையில் உள்ளவர் மட்டுமல்ல அட
      நானும் ஏமாந்தேன்

      ஆத்திரம் என்பது பெண்களுக்கெல்லாம்
      அடுப்படி வரைதானே - ஒரு
      ஆதிக்க நாயகன் சாதிக்க வந்தால்
      அடங்குதல் முறைதானே (கம்பன்)





Thank you! for sending this Webpage to your friend





காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.