நான் 1989 ஆண்டு எங்கள் பாடசாலைக் கண்காட்சின் போது 7 கம்பியூட்டர்களில் தமிழில் இதைச் (தமிழ்) செய்துவைத்தேன். அப்போது இன்டர்நெட் (Internet) இல்லை, ஏன் கணனி கூட ஒரு சிலரிடம்தான் இருந்து (கணனியின் விலை கிட்டத்தட்ட $5,000). அதுவும் தமிழில் எழுதுவது என்றால், எவ்வளவு கஷ்டம் என்று சொன்னால் இலகுவில் விளங்காது, அதை அப்போது செய்தவர்களுக்குத்தான் தெரியும். 20 வருடங்களிற்கு முன், இப்ப மாதிரி அப்ப விண்டோஸ் (Windows) இல்லை, Tamil Fonts உம் இல்லை, ஏன் Monitor இல் கூட ஒருவகைக் color (Mono) தான்!
By: Kumar Nalliah
[அதன் Windows வடிவத்தை இங்கு தருகிறேன்! இது உங்கள் பிள்ளைகலின் தமிழ் அறிவுக்கும் உதவும்.]
தமிழ்
தமிழ் அமிழ்தினும் இனியது.
Tamil is one of the ancient languages of the world.
உலகப் பழம் பெரும் மொழிகளுள் தமிழும் ஒன்றாகும்.
Nearly eighty million people are speaking Tamil in the world.
உலகில் ஏறக்குறைய எட்டுகோடி மக்கள் தமிழ் பேசுகிறார்கள்.
Philologists say that Tamil has a history of five thousand years.
தமிழ் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னயைது என மொழியியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்
To prove this, they show quotation from ancient "Sangam works", such as Tolkapiyam, Ahananootu, Purananootu , and Pathittupaththu.
இதை நிரூபிக்க தொல்காப்பியம், அகநாநூறு புறநாநூறு, பதிற்றுப்பத்து போன்ற சங்க நூல்களில் இருந்து மேற்கொள்கய் காட்டுகின்றனர்.
In the Ancient past king of "Chera Chola Pandiya" lands, nurtured the Tamil.
ஆதியில் மூவேந்தர்கள் தமிழ் வளர்த்தார்கள்.
They gave the pride of the place to the Tamil poets.
அவர்கள் புலவர்களைக் கெளரவித்தார்கள்.
These kings had three "Sangams" organizations to help the growth of Tamil.
அவர்கள் தமிழ் வளர்க்க முச்சங்கங்கள் வைத்திருந்தனர்.
They are first, second, third "Sangams" organizations.
முதற்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்பன அவை.
The first Sangam was situated at Kapadapuram, near Pahurili River.
முதற்சங்கம் பஃறுளி ஆற்றங்கரையில் இருந்த கபாடபுரத்தில் இருந்து.
They do not exist now. They went under the sea.
இப்போது அவை இல்லை, கடல் கொண்டுபோய்விட்டது.
In the work of “Purananooru” these is a line “Pahuruli Aatuin(River) manalilum palavei”. This line is proving this statement.
புறநானூற்றில் "பஃறுளி ஆற்றின் மணலிலும் பலவே" என ஒரு அடி வருகிறது.
Even now Tamil is growing.
இப்போதும் தமிழ் வளர்கிறது.
There are 247 alphabets in Tamil.
தமழில் 247 எழுத்துக்கள் உண்டு.
There are 12 vowels, 18 consonants, 216 vowel-consonants and 1 Aytham.
இதில் 12 உயிர் எழுத்துக்கள், 18 மெய் எழுத்துக்கள், 216 உயிர்-மெய் எழுத்துக்கள் 1 ஆய்தம்.
There are hard-sound, soft-sound, medium-sound alphabets.
வல்லினம், மெல்லினம், இடையினம் என ஒலி எழுப்பும் எழுத்துக்கள் உண்டு.
“Iyal, Isai, Natakam” are the three divisions of Tamil.
இயல், இசை, நாடகம் என மூவகைத் தமிழ் உண்டு.
Natakam is Drama, Isai-music, and Iyal is grammatical language.
நாடகம் நடனமும் இசையும் கலந்தது இசை-சங்கீதம், இயல் இலக்கணத்தமிழ்.
Each of them has it own grammar.
இவற்றிக்கு தனித்தனியே இலக்கணங்கள் உண்டு.
உலகம் உள்ள வரை தமிழ் இருக்கும் !
LONG LIVE TAMIL !... LONG LIVE TAMIL !.... LONG LIVE TAMIL !...
வாழ்க தமிழ் !.......வாழ்க தமிழ் !.......வாழ்க தமிழ் !.......
குமார் நல்லையா
![]() |
![]() |
அன்று என் வாழ்விலும் திருப்பு முனையாக அமைந்தது, காரணம் இதைவிட இன்னும் செய்யலாம் என்ற தன் ஆர்வமும், தன்நம்பிக்கையும், தைரியமும் எனக்கு உண்டானது. [ஆனாலும் என்னால் 1991 ஆண்டின் பின் அந்த வேகத்தில் இயங்க முடியவில்லை! தெடர் இழப்புக்கள்..... இப்ப நாட்டையும்???]
In 1989 First time, I published Tamil Fonts (Not a Windows edition) to public in Canada. [கனடாவில் 1989 ஆம் ஆண்டு தமிழ் எழுத்துக்களை கணனியில் முதல் முதலில் நான் அறிமுகப்படுத்தினேன்.]
Our School Principal Mrs. Sheila Hamilton said that, “You proved that you are going to be an Engineer”. During that time I’m also working with the School Board; she know that, what I’m going to study at University. [1995 ஆம் ஆண்டு அந்த ஆசை, இலச்சியம் பல பல தடைகளை தாண்டி நிறைவேறியது! நான் 9ஆம் வகுப்பு படித்துகொண்டிருக்கும்போது, நான் ஒரு என்ஜினீயராக வரவேண்டும் என்று எண்ணினேன்.]
Our Computer Teacher Mr. C. Visconti said that; I just teach, "You illustrate the real use of programming and good creativity". [On that day, I didn’t do just Tamil programs and also I did other Programs… ]
அன்று கண்காட்சிக்கு வந்த பலர் தமிழர்கள் இதைப் வரிசையில் நின்று அச்சுப்படி (Print-out) எடுத்து சென்றார்கள்.
அப்பேது இருந்த தமிழ் பத்திரிகையிலும் இதைப்பற்றி பாரட்டி எழுதி இருந்தர்கள். (ஒரு பத்திரிகையில் நான் பல கம்பியூட்டர்களில் தமிழ் பிரதிபலிப்புக்கள், செய்திகள் வைக்கப்பட்டிருந்தன என்றும், ஆனால் வரலாற்றில் தமிழ்க்கே முக்கியத்துவம் கொடுத்துள்ளேன் என்று படித்தாக நினைவிருக்கு...)
அறிவியல் (Science), கணனித் தொழில் நுட்பம் (Computer Technology) இப்ப எங்கயே சென்றுவிட்டது. இப்ப இதுகளைச் செய்வது சுலபம்! ஆனால் அப்பேது இது எவ்வளவு கஷ்டம் என்று சொன்னால் இலகுவில் விளங்காது, எலியும் (Mouse), யன்னலும் (Windows) இல்லாத காலம் அது.