• இடைக்காலப்பாடல்கள் மிக அருமையான பாடல்கள், கேட்டுக்கொண்டே இருக்கலாம். அதுவம் இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல்கள், என்றால் பசிகூட எடுக்காது. இசையால் வசையாகா இதயமுண்டோ...


   என் வானிலே, ஒரே வெண்ணிலா
   காதல் மேகங்கள், கவிதை தாரகை ஊர்வலம் (என்...)

   நீரோடை போலவே என் பெண்மை
   நீராட வந்ததே என் மென்மை (நீரோடை...)

   சிரிக்கும் விழிகளில் ஒரு மயக்கம் பரவுதே
   வார்த்தைகள் தேவையா?...ஆ....!(என்...)

   நீ தீட்டும் கோலங்கள் என் நெஞ்சம்
   நான் பாடும் கீதங்கள் உன் வண்ணம் (நீ தீட்டும்...)

   இரண்டு நதிகளும் வரும் இரண்டு கரையிலே
   வெள்ளங்கள் ஒன்றல்லவா?...ஆ....! (என்...)
 • ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி - அடிக்கடி நான் கேட்டு ரசிக்கும் பாடல்கலில் இதுவும் ஒன்று.படம் : தர்மயுத்தம், இசைஞானி இளையராஜா இசையமைத்த பாடல், மலேசியா வாசுதேவன், எஸ்.ஜானகி அழகாக பாடியுள்ளர்கள்.


   ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
   பொன்மான் விழி தேடி
   மேடை கட்டி மேளம் தட்டி
   பாடுதே மங்களம் நாடுதே சங்கமம்

   குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
   சீதா புகழ் ராமன்
   தாளம் தொட்டு ராகம் தொட்டு
   பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

   காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
   மேள தாளம்..ஓஓஒஒ
   காதல் நெஞ்சில்..ஹே ஹே ஹே ஹே
   மேள தாளம்..ஓஓஒஒ
   காலை வேளை பாடும் பூபாளம்
   மன்னா இனி… உன் தோளிலே…
   படரும் கொடி நானே
   பருவப் பூ தானே
   பூ மஞ்சம் உன் மேனி எந்நாளில் அரங்கேறுமோ

   குங்குமத் தேரில் நான் தேடிய தேவன்
   சீதா புகழ் ராமன்
   மேடை கட்டி மேளம் தட்டி
   பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

   தேவை யாவும் ஹே ஹே ஹே ஹே
   தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
   தேவை யாவும் ஹே ஹே ஹே
   தீர்ந்த பின்னும் ஓஓஒஒ
   பூவை நெஞ்சில் நாணம் போராடும்

   ஊர்கூடியே உறவானதும்
   தருவேன் பலநூறு
   பருகக் கனிச்சாறு
   தளிராடும் என் மேனி தாங்காது உன் மோகம்

   ஆகாய கங்கை பூந்தேன் மலர் சூடி
   பொன்மான் விழி தேடி
   தாளம் தொட்டு ராகம் தொட்டு
   பாடுவான் மங்களம் நாடுவான் சங்கமம்

 • இளையராஜாவின் தேனிசையில் இன்னுமொரு பாடல், காற்றில் எந்தன் கீதம், காணாத ஒன்றைத்தேடுதே. ...படம் - ஜானி, எஸ்.ஜானகி உணர்ந்து உருகிப் பாடியிருப்பார். ஜானகியின் குரல் இன்னுமொரு இசைக்கருவியைப்போல், மிகச்சீராகப் பாடியிருப்பார்.


   காற்றில் எந்தன் கீதம்
   காணாத ஒன்றைத் தேடுதே

   அலை போல நினைவாக
   சில்லென்று வீசும் மாலை நேர
   காற்றில் எந்தன் கீதம்
   காணாத ஒன்றைத் தேடுதே

   எங்கெங்கும் இன்பம் அது கோலம் போட
   என் உள்ள வீணை ஒரு ராகம் தேட
   அன்புள்ள நெஞ்சம் காணாதோ
   ஆனந்த ராகம் பாடாதோ
   கண்கள் ஏங்கும்
   நெஞ்சின் தாபம் ஏயும் ஏற்றும் (காற்றில் எந்தன் கீதம்)

   நில்லென்று சொன்னால் மனம் நின்றா போகும்
   நீங்காத நெஞ்சில் அலை ஒய்ந்தால் போதும்

   மௌனத்தின் ராகம் கேளாதோ
   மௌனத்தில் தாளம் போடாதோ
   வாழும் காலம்
   யாவும் இங்கே நெஞ்சம் தேடும் (காற்றில் எந்தன் கீதம்)
Thank you! for sending this Webpage to your friend

காப்புரிமை © 1999 ஆண்டிலிருந்து - NallPro® All rights reserved.