எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
கடல் விழுங்கும் முன்பே நிலம் விழுங்க வந்த
பகை முடித்து புகழ் படைத்த மகுறொளியாற்றின்
பண்பலை அடக்கத்தில் வாழ்ந்த நம்பாட்டன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
முருகனுக்கே அவன் நிகரானவன் (எங்கள்)
வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்
வேல் எடுத்தான் அவன் வேல் எடுத்தான்
வேல் எடுத்தே அவன் பகை முடித்தான்
தமிழ் பகை முடித்தான்
பழம் தமிழ் பகை முடித்தான்
துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்
துவக் எடுத்தான் இவன் துவக் எடுத்தான்
துவக் எடுத்தே இவன் துவக்கி வைத்தான்
படை துவக்கி வைத்தான்
புலிப்படை துவக்கி வைத்தான் (எங்கள்)
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக
அடிமையின் அடிமைக்கும் அடிமைகளாக
வாழ்ந்தவர் வேதனை முடிக்க வந்தான்
நம் தமிழின எழுச்சியை முடுக்க வந்தான்
மேடையில் பேச ஏறியதில்லை
தேர்தல் சீற்றிலும் இறங்கியதில்லை (மேடையில்)
தாயை அதிகம் பார்த்தவன் இல்லை
தாயை அதிகம் பார்த்தவன் இல்லை
தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை
தமிழ்தாய் நெடுநாள் எதிர்பார்த்த பிள்ளை
எங்கள் தலைவன் பிரபாகரன் அந்த
முருகனுக்கே அவன் நிகரானவன்
முருகனுக்கே அவன் நிகரானவன்
ராஜ கோபுரம் எங்கள் தலைவன்
பார் எங்கும் புகழ்கின்ற எங்கள் தலைவன்
தடை நீக்கி வழி காட்டும் தலைவன்
வந்த பகை வென்று முடிகொண்ட தலைவன். (ராஜ கோபுரம்)
காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு
கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு
ஆஆ...ஆஆ....ஆஆஆ......ஆஆஆஆ.....ஆஆஆஆ
காலம் எல்லாம் கைதந்த ஒளிவீச்சு
கரிகாலன் தமிழரின் உயிர் மூச்சு (ராஜ கோபுரம்)
கண்ணென தமிழரை காக்கும் காப்பரனே
கன்னித்தமிழுக்கு வாய்த்த கதிரவனே
கோடை காலத்து குளிர்விக்கும் நிலவே
கொட்டும் மழை நாளில் குடையான அழகே (ராஜ கோபுரம்)
குளிரான இளம் காலை என நினைந்தவனே
நெருப்பாகி பகைவரின் குகை எரித்தவனே
ஓயாது உழைத்திடும் அலைஆகும் கடலே
தமிழீழம் தனை நோக்கி விரைகின்ற படகே. (ராஜ கோபுரம்)
பொங்கிடும் கடற்கரை ஒரத்திலே
மழை பொழிந்திடும் கார்த்திகை மாதத்திலே
மங்களம் தங்கிடும் நேரத்திலே
எம் மன்னவன் பிறந்தான் ஈழத்திலே (பொங்கிடும்)
பாசத்தில் எங்களின் தாயானான்
கவி பாடிடும் மாபெரும் பேரானான்
தேசத்தில் எங்கணும் நிலையானான்
விலை தேடியே வந்திடும் தலையானான் (பொங்கிடும்)
இன்னல்கள் கண்டுமே தான் கொதித்தான்
பல இளைஞரை சேர்த்துமே களம் குதித்தான்
தன்னின மானத்தை தான் மதித்தான்
பகை தாவியே வந்திட கால் மிதித்தான் (பொங்கிடும்)
இங்கொரு தாயகம் மூச்சென்றான்
தமிழ் ஈழமே எங்களின் பேச்சென்றான்
வந்திடும் படைகளை வீச்சென்றான்
புலி வாழ்ந்திடும் வரையினில் தூசென்றான் (பொங்கிடும்)
விடுதலைபுலிகளின் பலமானான்
தமிழ் வீடுகள் யாவிலும் மலரானான்
படுகளம் மீதிலோர் புலியானான்
பிரபாகரன் எங்களின் உயிரானான் (பொங்கிடும்)
என்றுமே எங்களின் தளபதியே
நீ எங்களின் வானத்து வளர்மதியே
இன்று உனக்கு ஆயிரம் சோதனைகள்
தமிழ் ஈழத்தை வாங்குமுன் போதனைகள் (பொங்கிடும்)