இனிய அன்பு தமிழ் நெஞ்சங்களுக்கு வணக்கம்! _/\_
NallPro என்னும் பெயரை எனது தந்தையின் Nalliah என்ற பெயரில்லிருந்து முன் நான்கு எழுத்துக்களான N.a.l.l என்ற எழுத்துக்களை வைத்து பின் Pro என்பது Professional என்பதன் சுருக்கம், இவை இரண்டையும் இணைத்து வந்த பெயர்தான் NallPro [Name Established in 1992].
NallPro வின் இணையத்தளம்
[Internic Report:- Domain Name: NALLPRO.COM Creation Date: 20-mar-1999] உத்தியோகபூர்வமாக பதிவு செய்யப்பட்டு; 1999 ஆண்டு அக்டோபர் மாதம் 19ம் நாள் வகுப்புக்கள் ஆரம்பமானது, வரும் October 19, 2023 உடன் 24 வருடங்கள்....
NallPro's OnLine TUTORING
COVID-19 தொற்றுநோய் காரணமாக; NallPro April 14, 2020 அன்று தொலைதூர (OnLine) பயிற்சியைத் தொடங்கியது. | 20 + ஆண்டுகள் வெற்றிகரமாக நேரில் (OnSite) வகுப்பினை முடித்த பிறகு!
தொலைதூர கற்பிப்பதற்கான உண்மையான தீர்வுகளை NallPro நிறைவேற்றுகிறது!
நேரில் (OnSite) வகுப்பின் கிட்டத்தட்ட அதே அல்லது அதற்கு மேற்பட்ட நன்மைகளைப் பெறுங்கள்;
NallPro வின் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே!!
|
|
|
NallPro's Computer Training இல் 6 வயதிலிருந்து 65 வயது வரை, கணனி பற்றிய எவ்வித முன்னறிவு அற்றவர்கள் முதற்கொண்டு, கணனித்துறையில் தொழில் புரிவோர் வரை, பல தரப்பட்ட வகுப்புக்களும் நடத்தப்படுகின்றன. இங்கு ஒவ்வொரு மாணவருக்கும் தனிப்பட்ட கவனம் எடுத்து சொல்லிக் கொடுக்கப்படுகிறது. படிக்கும்போது எவ்வித தயக்கமின்றி பாடத்தில் கேள்விகளைக் கேட்கலாம், மிக மிக இலகுவான முறைகளில் விளக்கம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
|
NallPro's MATH Tuition இல் முதலாம் வகுப்பிலிருந்து பல்கலைக்கழகம் வரை கணிதம் சொல்லிக் கொடுக்கப்படுகிறது.
பாடசாலைப் பருவத்திலேயே மாணவர்களுக்கு கல்வியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்க செயல்வழி கற்றல் முறையில் பாடம் கற்பிக்கப்பட்டு வருகிறது.
மாணவர்களின் கல்வித் தரத்தை அடையாளம் கண்டு கணிதம் பயிற்சி வழங்கப்படுகிறது.
மாணவர்களின் பாடசாலைக் கணிதப்பாட வீட்டு வேலையுடன், NallPro இன் 10,000 மேல் பட்ட கணிதப்பயிற்சி தாழ்களுடனும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
|
|
[ எண்ணும், எழுத்தும், கணனியும் கண் எனத்தகும்! ]
NallPro can educate anyone, who can understand the Value of Education!
|
உங்கள் குழந்தைகள் படிக்கும் வாழ்க்கைக்கு பல ஆசிரியர்கள் வந்து செல்கிறார்கள், ஆனால் சில ஆசிரியர்கள் மட்டுமே மாணவர்களை நன்றாக கவனித்துக்கொள்கிறார்கள்; அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்வதில் பெருமை கொள்கிறேன். கடந்த 24+ வருடங்களாக NallPro மூலமாகவும், 5 வருடங்களாக TBE மூலமாகவும் பல வழிகளில் நிரூபித்துள்ளேன்!
பின் குறிப்பு::
நான் முன்பு குறிப்பிட்ட மாதிரி நானே எல்லாம் இதை வடிவமைக்கிற படியினால், எழுத்துப்பிழை, கருத்துப்பிழை இருப்பின், எனக்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்! kumar@nallpro.com நன்றி உங்கள் ஒத்துழைப்பிற்கு.